ராகுல் காந்தி தேசிய பேரவை சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான்,கந்தசாமி ஆகிய இருவரின் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள்..
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான்,கந்தசாமி ஆகிய இருவரின் பிறந்தநாள் விழா, ராகுல் காந்தி தேசிய பேரவை சார்பில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
ராகுல் காந்தி தேசிய பேரவை தலைவரும் ஊடக பிரிவு சேர்மனுமான ஆர்.இ சேகர் தலைமையில், பொதுக்குழு உறுப்பினரும் பேரவை துணை தலைவருமான திருவேங்கடம் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்ணாசாலை ஜெயின் கோயில் அருகே நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் உட்பட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். முன்னதாக காங்கிரஸ் கட்சி சார்பில் மணக்குள விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தங்கத்தேர் இழுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன்,முன்னால் எம்எல்ஏக்கள் பாலன், அனந்தராமன்,கார்த்திகேயன்,முன்னாள் இளைஞர் காங்கிரஸ் செயல் தலைவர் விக்னேஷ், ராஜீவ் காந்தி பஞ்சாயத் சங்கதன் தலைவர் அமுதரசன்,புஷ்பராஜ், ராகுல் காந்தி பேரவை செயலாளர் அசோகன்,தயாளன்,பிரபு மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ரவிச்சந்திரன்,கோவிந்தராஜ்,குமரன், மகளிர் காங்கிரஸ் ஜெயலட்சுமி, டாக்டர் விஜயகுமாரி,சாந்தி,தொழில் முனைவோர் பிரிவு சுகுமாரன்,ஆனந்து, செல்வம்,ஆனந்த பத்மநாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments