புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் தனியார் உணவகத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் காமராஜர் நகர் தொகுதியின் செயல் வீரர்கள் கூட்டம் ஜெயராம் உணவகத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தேவதாஸ் தலைமை தாங்க சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் எம்பி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மாநில மாவட்ட தொகுதி மற்றும் இளைஞர் அணி மாணவர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பாடுபடுவது எனவும், ஆலோசனை ஆலோசிக்கப்பட்டது தொடர்ந்து தேர்தலை முன்னிட்டு உறுப்பினர் சேர்க்கையும் தீவிர படுத்த வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி...
புதுச்சேரி அரசின் ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது மக்களை வஞ்சிக்கும் அரசாகவே என் ஆர் காங்கிரஸ் பாஜக அரசு உள்ளது என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
No comments