அறிவுசார் குறைபாடு உடைய இளைஞரைஉறவினர்களுடன் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்த காப்பக நிர்வாகிகள்.
மேலும் இதில் ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக உள்ளனர் அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி மற்றும் உணவு, உடை, உடற் பயிற்சி, மன நல ஆலோசனை, பொழுது போக்கு அனைத்தும் இலவசமாக அவர்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த எட்டு மாதங்களுக்கு 21.03.2024 முன்பாக திருச்செங்கோடு காவல் நிலைய மூலமாக ஜார்கண்ட் வட மாநிலத்தை சார்ந்த பகுதியைச் சேர்ந்த ஹிந்தி மொழி பேசும் நபர் ஒருவர் இந்த அனைக்கும் கரங்கள் மன நல இல்லத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
அவரை கடந்த எட்டு மாதங்களாக பராமரிப்பு செய்த மருத்துவரும், செவிலியரும், சமூகப் பணியாளரும் கவனித்து அவருக்கு தேவையான மன ஆலோசனைகள் முறையான முறையில் மருத்துவ உதவிகள் தங்குமிடம், உணவு உடை, அனைத்தும் அளிக்கப்பட்டு எட்டு மாதம் முடிவில் அவரது அவரது முடிவின் பேரில் அவரது சொந்த ஊரான வட மாநிலத்தில் விசாரித்து மாற்று திறனாளி அலுவலகர் பரிந்துரையின் படியும் இங்கிருந்து அவரது மனைவி மற்றும் சகோதரர் அவர்களை தொடர்பு கொண்டு விவரங்களை கூறிய பின் அவர்களை வரவைத்து பத்திரமாக அவரது விருப்பத்தின் பெயரில் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் இதுக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அதிகாரிகளுக்கும் மற்றும் நலம் விரும்பிகளுக்கும் நன்றிகள் தெரிவித்தார் அதன் நிறுவனர் ஜாய் ரோஷினி.
No comments