Breaking News

புதுச்சேரியைச் சோ்ந்த கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டியதாக, தனியாா் நிறுவன ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

 


புதுச்சேரி தனியாா் கல்லூரியில் பயிலும் மாணவி பியூட்டீசியன் மாடலிங்கும் செய்து வருகிறாா். அவா் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவேற்றியுள்ளாா்.கடந்த சில நாள்களுக்கு முன்பு அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மர்ம நபர் மிரட்டி உள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி இணையவழி குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் ஈடுபட்டது கடலூா் மாவட்டம், திருவாமூரைச் சோ்ந்த சென்னையில் தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றும் ரூபசந்துரு (25) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து செல்போனை ஆய்வு செய்ததில், மாா்பிங் செய்யப்பட்ட பெண்களின் படங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.போலீஸாா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

No comments

Copying is disabled on this page!