உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை - மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதற்கிடையே உளுந்தூர்பேட்டைக்கு அருகே உள்ள சிறுபாக்கம் கிராமத்தில் வயல்வெளி பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கிராம பெண்கள் விவசாயக் கூலி வேலை பார்த்து வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்களுக்கு அருகில் நின்று கொண்டிருந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான கன்னுக்குட்டியின் மீது பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இதில் கண்ணு குட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அருகில் கூலி வேலை பார்த்துக் கொண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த 4 பெண்கள் நூலிழையில் உயிர் தப்பிய நிலையில் அவர்கள் நான்கு பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments