மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடு வெட்டி குரு அவர்களின் 64-வது பிறந்த நாள் விழா..
மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு அவர்களின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில வன்னியர் பாதுகாப்பு பேரியக்கத்தின் நிறுவன தலைவர் செந்தில் தலைமையில் தட்டாஞ்சாவடியில் உள்ள காடுவெட்டி குரு அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியது.
தொடர்ந்து வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட ஜி.என் பாளையம் பகுதியில் வன்னியர் பாதுகாப்பு பேரியக்கத்தின் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் மகளிருக்கு புடவைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் முருகன், தொகுதி தலைவர் சிவராமன், செயலாளர் கலைமணி, இளைஞரணி தலைவர் கணபதி, மோகன், துணைத் தலைவர் ஜெயராஜ், மங்கலம் தொகுதி தலைவர் பாலமுருகன், சுரேஷ், ஜெயராமன், மற்றும் வன்னியர் சங்க பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.
No comments