ஆரியபாளையம் பகுதியில் அமைந்துள்ள வடிசாராய ஆலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..
புதுச்சேரி வில்லியனூர் அடுத்து ஆரியப்பாளையம் பகுதியில் வடிசாராய ஆலை அமைந்துள்ளது. இங்கு கடந்த 2009ம் ஆண்டு 53 பேர் தற்காலிக ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து கடந்த 2013-14ம் ஆண்டு 44 பேர் தற்காலிக ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர். அப்போது 2009ம் ஆண்டும் நியமிக்கப்பட்டவர்கள். பணி நிரந்தரம் கேட்டு போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து 53 பேரும் கடந்த 2015ம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் புதுவை சேர்ந்த நபர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பணி நிரந்தரம் செய்யப்பட்ட 53 பேரின் நியமனம் செல்லாது என உத்தரவிட்டது. தொடர்ந்து ஊழியர்கள் தர்ப்பில் மேல் முறையிடு செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் 2009ம் ஆண்டு பணியில் சேர்ந்த 53 நிரந்தர ஊழியர்களை பணி நீக்கம் செய்து நோட்டீஸ் ஓட்டியது.
இந்நிலையில் வடிசாராய ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணி நியமனம் செய்து வருவதாக தகவல் வெளியே வெளியானது.
இதையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை பணி நியமனம் செய்வதை கண்டித்து இன்று காலை வடிசாராய ஆலை முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments