ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணிபுரியும் கண்காணிப்பாளர் உட்பட 3 பேரின் பணி நிறைவு பாராட்டு விழா.
புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணி புரியும் கண்காணிப்பாளர் பழனி,எம்டிஎஸ் ஊழியர் குப்பம்மாள் மற்றும் தங்கமணி ஆகியோரின் பணி நிறைவு பாராட்டு விழா,துறை இயக்குனர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
ஆதி திராவிடர் நலத்துறை அலுவல வளாகத்தில் நடைபெற்ற விழாவில், பணி நிறைவு பெறும் அதிகாரி மற்றும் ஊழியர்களுக்கு இயக்குனர் இளங்கோவன் சால்வு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து விழாவில் பேசிய அவர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் மூன்று பேரின் பங்களிப்பு மிக சிறந்ததாக அமைந்தது என்றும், இவர்களுடன் சேர்ந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக என தெரிவித்தார். வயதுக்கு தான் ஓய்வு கிடைத்துள்ளது என்றும் மனதிற்கு இல்லை என்ற இயக்குனர், மகிழ்ச்சியுடன் உங்களது நேரத்தை குடும்பத்தினருடன் செலவிடுங்கள் என குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர்கள் வேல்முருகன்,கதிரவன்,தேவி மற்றும் கணக்கு அதிகாரி ராணி உட்பட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments