நெட்டப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து நடைபெற்ற பூமி பூஜை பணிகளை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணாம்பாள் நகருக்கு தார் சாலை அமைத்தல், புனிதவதி நகருக்கு தார்சாலை அமைத்தல், குச்சிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை மேம்படுத்துதல், மூலப்பாக்கம் ராஜீவ் காந்தி வீதி மேம்படுத்துதல் மற்றும் நெட்டப்பாக்கம் தெப்பக்குளத்தை சுற்றிலும் பதில் சுவர் உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. மொத்தம் 55 லட்சம் ரூபாய்க்கான பூமி பூஜை பணிகளை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் ராமலிங்கேஸ்வரராவ் இளநிலை பொறியாளர்கள் மாணிக்கசாமி, ஐயப்பன் உட்பட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments