வில்லியனூர் தொகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய சாலைகள் அமைக்கும் பணியினை எதிர்க்கட்சித் தலைவர் சிவா பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் வில்லியனூர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வில்லியனூர் பெரம்பை சாலையில் எஃப்.என். நகரில் உள்ள குறுக்குச் சாலைக்கு ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி மற்றும் சுல்தான்பேட்டை, சஃபா நகர் சாலைக்கு ரூபாய் 13 லட்சத்து 44 மதிப்பீட்டில் சாலை என மொத்தம் ரூ. 20 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கலந்துகொண்டு சாலை அமைக்கும் பணிகளை பூஜை செய்து துவக்கி வைத்தார். இதில், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியாளர் சத்யநாராயணன் மற்றும் தொகுதி திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments