மணவெளி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்காக எதிர்க்கட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.
வில்லியனூர் தொகுதி மனவெளி கிராமத்திற்கு உட்பட்ட விஐபி நகரில் ரூபாய் 17 லட்சத்து 63 ஆயிரம் செலவில், மின்துறை சார்பில் 200 ஓல்ட்டேஜில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு அதனை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை இயக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மின்துறை செயற்பொறியாளர் ஸ்ரீதர், உதவி பொறியாளர் சந்திரசேகர், இளநிலை பொறியாளர் ஸ்டாலின் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்...
No comments