மாநில அளவில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா..
புதுச்சேரி இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கத்தில் மாநில அளவிலான 6ஆம் ஆண்டு மல்யுத்த போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கு பெற்று விளையாடிய போட்டியில் வெற்றி பெற்ற லயன்ஸ் ரெஸ்லிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர்களுக்கு பரிசளிப்பு விழா வில்லியனூரில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகளாக புதுச்சேரி அமெச்சூர் ரெஸ்லிங் அசோசியேசன் சங்க செயலாளர் மாஸ்டர் வினோத், அகாடமி சேர்மன் ஜனார்த்தனன், அகில இந்திய மனித உரிமைக் கழக மக்கள் விழிப்புணர்வு மையத்தின் தேசிய தலைவர் டாக்டர் ராஜ்குமார் மற்றும் லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினர்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கிளை செயலாளர் சோமசுந்தரம் செய்திருந்தார். மேலும் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை லயன்ஸ் கிளப் வென்றிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments