Breaking News

புகையான் தாக்குதல் கருகும் நெற்பயிர்கள் தங்கள் வயிறும் கருகுவதாக விவசாயிகள் வேதனை அதிகாரிகள் ஆய்வு நடத்தி நிவாரணம் வழங்க கோரிக்கை.

 


மயிலாடுதுறை மாவட்டம் முழுவதிலும் தற்பொழுது சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகிறது பல இடங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள சம்பா நெற்பயிர்களில் புகையான் பூச்சி தாக்குதல் ஏற்பட்டு நெருப்பயிர்கள் கருகி உள்ளது குறிப்பாக தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் சுற்றுவட்டார பகுதிகளில் திருக்கடையூர் ஆக்கூர் காழியப்பநல்லூர் கண்ணப்பன் மூளை மடப்புரம் கிடங்கள் மாமா குடி அன்னப்பன் பேட்டை மருதம்பள்ளம் நட்சத்திரமாலை கிள்ளியூர் மாத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர் சம்பா சாகுபடி செய்துள்ள நெருப்பயிர்கள் தற்பொழுது அறுவடைக்கு தயாராகி உள்ளது இந்நிலையில் தொடர் மழை மற்றும் தற்பொழுது பனிமூட்டம் பனிப்பொழிவு காரணமாக நெற்பயிர்களில் புகையான் பூச்சி தாக்குதல் அதிகரித்து அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் கருகி வருகிறது.இதுவரையில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் கருகி பாதிக்கப்பட்டுள்ளது ஒருபுறம் இயற்கை சீற்றங்கள் காரணமாக விவசாயம் பாதிக்கும் நிலையில் மறுபுறம் பூச்சி தாக்குதல் காரணமாக விவசாயம் பாதிக்கப்படுகிறது இதுபோன்று விவசாயம் நெற்பயிர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


தற்பொழுது புகையான் பூச்சி தாக்குதல் காரணமாக நெற்பயிர்கள் கருகும் நிலையில் தங்கள் வயிறும் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். புகையான் பூச்சி தாக்குதல் குறித்து பாதிப்பு குறித்து திருக்கடையூர் ராமமூர்த்தி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அவர் கூறும்போது: நெற்பயிர்களில் புகையான் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பல்வேறு பூச்சி மருந்துகள் அடித்தும் பயனில்லை எனவும் மேலும் நெற்பயிர்கள் கருகி வருவதாக பாதிக்கப்படுவதாக தெரிவித்தார் மேலும் வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து புகையான் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த ஆலோசனை வழங்குவதோடு பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு பயிர் காப்பீடு நிவாரணம் வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


No comments

Copying is disabled on this page!