தமிழக ஆளுநர் ஆர்என்.ரவியை கண்டித்து தூத்துக்குடியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்..
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என்.ரவியை கண்டித்து தூத்துக்குடியில் வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்து ஒன்றிய அரசின் ஏஜென்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களை செய்யும் ஆளுநரை காப்பாற்றிடவும் ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றும் வித்தைகளை செய்யும் அதிமுக, பாஜக கூட்டணியைக் கண்டித்தும், தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments