Breaking News

சீர்காழி விவேகானந்தா குட் சமாரிட்டன் மழலையர் பள்ளியில் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து சமத்துவ பொங்கல்..

 


சீர்காழியில் வேட்டிசட்டை, பாவாடை சட்டை அணிந்து பொங்கல் விழா கொண்டாடிய மழலையர்கள்.  பழங்களில் உருவங்களை செதுக்கி அசத்தல்.ஆசிரியைகளின் நடனத்தை ஆரவாரத்துடன் ரசித்த மழலையர்கள் ....

இயற்கை சாகுபடி காய்கறி சந்தை அமைத்து  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி  விவேகானந்தா குட் சமாரிட்டன் மழலையர் பள்ளியில் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டது.  கரும்பு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மண்அடுப்பில் பொங்கலிடப்பட்டது. இதில் சிறுவர்கள் வேட்டி, சட்டைஅணிந்தும், சிறுமிகள் பாவாடை சட்டை அணிந்தும் பங்கேற்றனர். தொடர்ந்து ஆசிரியைகளின் நடனம் நடைபெற்றது. இதனை பள்ளி மழலையர்கள் கைதட்டி ஆராவாரத்துடன் கண்டு ரசித்தனர். முன்னதாக மாணவ}மாணவிகளுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பலவகை பழங்களில் பல்வேறு வித, விதமான உருவங்கள் கார்விங் முறையில் செதுக்கி ப்ரூட் கார்விங் கண்காட்சியாக சிறுவர் சிறுமிகள்  காட்சிபடுத்தியிருந்தனர்.மேலும் ரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் சாகுபடி செய்யும் காய்கறி தானியங்களை வாங்க வேண்டும் என்பது குறித்த காய்கறி சந்தை அமைத்தும் மாணவ மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் கே. வி. ராதாகிருஷ்ணன், செயலர் அனிதா ராதாகிருஷ்ணன், பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர் சிங் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினார்கள்.

No comments

Copying is disabled on this page!