சீர்காழியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 1000 பேருக்கு 21 வகையான காய்கறிகளை தொகுப்பை இலவசமாக வழங்கிய வியாபாரி.
மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி கடைவீதி மார்க்கெட்டில் பரணி ஸ்டோர்ஸ் மளிகை மற்றும் அபிஷேகப் பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருபவர் சரவணகுமார்.
ஆன்மீக ஈடுபாடு கொண்ட இவர், வைகுண்ட ஏகாதேசி திருநாளில் பக்தர்கள் கண்விழித்து விரதம் இருந்து
மறுநாள் காலை 21 வகையான காய்கறிகளை சமைத்து படையல் இட்டு விரதத்தை முடித்துக் கொள்வார்கள்.
ஆதலால் வைகுண்ட ஏகாதேசி தினத்தில் 21 காய்கறிகள் வீட்டில் சமைப்பது விசேஷமாகும்.
இந்நிலையில் சரவணகுமார் 1000 நபர்களுக்கு 21 வகையான காய்கறிகள் வழங்க ஏற்பாடு செய்தார். சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன் தலைமை வகித்தார் .ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர்கள் சுடர்கல்யாணம், சாமிசெழியன், சுசீந்திரன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பரஞ்ஜோதி ஜுவல்லரி முத்துகருப்பன், கவுன்சிலர் ஜெயந்தி பாபு, கணேசன், கோவிந்தராஜன், பழனி சோமு, சப்-இன்ஸ்பெக்டர் முருகவேல், அண்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்..
No comments