பாலா அறக்கட்டளை தொடங்கும் எண்ணம் இல்லை. ஆனால், பாலா மக்களின் கட்டளைகளை எப்போதும் ஏற்று நிறைவேற்றுவேன்:-
மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில் அதிநவீன சலூன் கடை திறப்புவிழாவில் கே.பி.ஓய் பாலா பங்கேற்றார். திறப்புவிழாவிற்கு வந்த பாலாவிற்கு பேப்பர்மழை பொழிந்து நிர்வாகத்தினர் வரவேற்றனர். கடையை திறந்து பார்வையிட்ட பாலாவுடன் ஒருவர்பின் ஒருவராக செல்பி எடுத்துக்கொண்டும் புகைப்படமும் எடுத்துகொண்டனர். பாலாவை பார்ப்பதற்காக கடையின் முன்பு குவிந்த ரசிகர்களுடன் பாலா செல்ஃபி எடுத்துக்கொண்டார். முகம் சுழிக்காமல் அனைவரின் செல்போன்களை வாங்கி தானே செல்ஃபி எடுத்து தந்தார். வாசலில் காத்திருந்த மாற்றுத்திறனாளி ஒருவரின் இடத்திற்கு சென்று நலம் விசாரித்து அவருடன் புகைப்படம் எடுத்துகொண்டு பாலா புறப்பட்டு சென்’றார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் விரைவில் சினிமாவில் மீண்டும் நடிக்கும் திட்டம் உள்ளது. தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட பான் இந்தியா திரைப்படம் பெரிய அளவில் ஓடவில்லையே என்ற கேள்விக்கு பான் இந்தியாவில் நான் ஒரு படம் நடித்து அப்படம் வெளியாகட்டும், அதன்பின்னர் அது குறித்து கூறுகிறேன். எதிர்காலத்தில் பாலா அறக்கட்டளை தொடங்கும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு பாலா அறக்கட்டளை தொடங்கும் திட்டம் இல்லை. ஆனால், பாலா மக்களின் கட்டளைகளை எப்போதும் ஏற்று நிறைவேற்றுவேன் என்றார். நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாலா விஜய் மிகப்பெரிய மேதை அவர் பற்றி சொல்ல அந்தளவிற்கு எனக்கு அறிவு இல்லை. விஜய்க்கு ஆதரவு தருவீர்களா என்ற கேள்விக்கு நான் கடுகுமாதிரி அவர் இமயமலை மாதிரி என்றார்.
No comments