காமராஜர் மணிமண்டப வளாகத்தில் 7 நாட்கள் நடைபெறும் குழந்தைகள் புத்தகம் மற்றும் விளையாட்டு பொருட்கள் கண்காட்சி.
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் படிக்கும் ஆர்வத்தை குழந்தைகளிடம் கொண்டுசெல்லும் வகையில்,காமராஜர் மணிமண்டப வளாகத்தில் "குழந்தைகள் புத்தகம் மற்றும் விளையாட்டு பொருட்கள் கண்காட்சியின் தொடக்க விழா இன்று நடைப்பெற்றது.
7 நாட்கள் நடைப்பெறும் இக்கண்காட்சியினை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் திருமுருகன், முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலர் ஜான்குமார் எம்எல்ஏ, மற்றும் அரசுச் செயலர் நெடுஞ்செழியன், இயக்குநர் கலியப்பெருமாள் பங்கேற்று சிறப்பித்தனர்.
இக்கண்காட்சியில் 60 அரங்குகளில் புத்தகங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் குழந்தைகளுக்கான புத்தகங்கள், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் இதர புத்தகங்களும் பார்வையாளர்களைக் கவரும் வகையிலும் பயன்படும் வகையிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து பதிப்பாளர்கள் புத்தகங்களைக் காட்சிப்படுத்தி உள்ளனர்.
தினமும் மாலையில் 300 உள்ளூர் கலைஞர்களைக்கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெரும் மேலும் இக்கண்காட்சியில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களைக் கவரும் வண்ணம் உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments