ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணமாக ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.30,000 தொகையை விவசாயிகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாகவும் சங்கராபரணி மற்றும் பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாகவும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணமாக ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்து இருந்தார். மேலும் அதிகாரிகள் முழுமையாக பயிர் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தி முடித்த நிலையில்
இன்று புதுச்சேரி பகுதி விவசாயிகள் 7,736 பேருக்கு ரூ.12 கோடியே 22 லட்சத்து 3,300 நிவாரண தொகைக்கான காசோலையை சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, விவசாய பிரதிநிதிகளிடம் வழங்கினார். தொடர்ந்து விவசாயிகளின் வங்கி கணக்கில் இழப்பீட்டு தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. ஒட்டு மொத்தமாக புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள 12,955 விவசாயிகளுக்கு பயிர் பாதிப்புக்கான நிவாரண தொகையாக ரூ.24,10,80,400 வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் விவசாயிகள் இலவசமாக பயன்படுத்தும் மின்சாரத்திற்கான மானியம் நடப்பு நிதியாண்டு வரை ரூ.36.18 கோடி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ. 9,15,46,227 மின் துறைக்கு செலுத்தப்பட்டுள்ளது அதற்கான காசோலையையும் முதலமைச்சர் ரங்கசாமி விவசாயிகளிடம் வழங்கினார்.
No comments