Breaking News

வாணியம்பாடியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசு பேருந்து பழுதாகி நின்று காலதாமதமாக பேருந்து சென்றதால் சிரமத்துக்குள்ளான பயணிகள்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து வேலூர் நோக்கி அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை சென்றது‌ அதனைத் தொடர்ந்து வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தப்பட்டு அங்கு பயணிகளை ஏற்றி கொண்டு ஓட்டுநர் பேருந்தை இயக்கிய போது பேருந்து இயங்கவில்லை. 

அதனை தொடர்ந்து பேருந்து நடத்துனர் பொதுமக்கள் மற்றும் பயணிகள் உதவியுடன் பேருந்து தள்ளப்பட்டு பின்னர் பேருந்து இயக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கிருந்து சிறிது தூரம் சென்றவுடன் காதர் பேட்டை பகுதியில் மீண்டும் பேருந்து பழுதாகி நின்றது. 

அதன்பின் பேருந்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்து பேருந்து இயக்கப்பட்டு பின்னர் மீண்டும் பயணிகளை ஏற்றுக் கொண்டு அரசு பேருந்து வேலூர் நோக்கி சென்றது. இதனால் அரைமணி நேரத்திற்கு மேலாக பேருந்து நின்றதால் அப்பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

- திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் 

பு.லோகேஷ். 

No comments

Copying is disabled on this page!