Breaking News

அரசு பள்ளி ஆசிரியையின் வீட்டின் கதவை பட்டப் பகலில் உடைத்து 13 பவுன் 3 லட்சரூபாய் கொள்ளை.


ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி அடுத்த செல்லப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையின்  வீட்டின் கதவை பட்டப் பகலில் உடைத்து 13 பவுன் 3 லட்சரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி அடுத்த செல்லப்பன் நாயக்கன் பாளையம், ஈ.பி நகரில் வசித்து வருப்பவர் விவசாயி சுப்பிரமணியம் ( 55), இவரது மனைவி அம்சவேணி (50), அரசு அரம்பபள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார், இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி அம்சவேணி  தங்களது பணிக்கு சென்று விட்ட நிலையில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகையும் 3 லட்சம் ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அக்கம் பக்கத்தினர் வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணியன் தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து விவசாயி சுப்பிரமணி மொடக்குறிச்சி போலீசாருக்கு புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் மொடக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் வீட்டில் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோகனாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,  வீட்டின் முன்பு 50க்கும் மேற்பட்ட உறவினர்கள் திரண்டு இருப்பதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments

Copying is disabled on this page!