Breaking News

வாணியம்பாடி அருகே சத்துணவு கூடம் மேல் பூச்சு இடிந்து விழுந்ததால் பரபரப்பு.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்து பெருமாள் பேட்டை பகுதியில், செயல்பட்டு வரும் நகராட்சி இந்து நடுநிலைப் பள்ளியில், சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள், பயின்று வருகின்றனர், இந்த நிலையில் பள்ளியின் உள்ளே எம்ஜிஆர் மதிய உணவுத் திட்டத்தின் கீழ், இருபறை கூடிய சமையலறை 3 லட்சம் மதிப்பீட்டில் 2012-13 ஆண்டு கால கட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தின் மேல் பூச்சி உதிர்ந்து விழுந்து உள்ளது.


தீபாவளி விடுமுறை நாட்கள் என்பதால், சத்துணவு பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு எந்த ஒரு விபத்தும் ஏற்படவில்லை,   சம்பவம் அறிந்து வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பெயரில் உதவி பொறியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர், இச்சமூவன் அப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது, மாற்று கட்டிடம் கட்டி தந்து மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.

- திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் பு.லோகேஷ். 

No comments

Copying is disabled on this page!