தூத்துக்குடியில் வாக்காளுக்கான சிறப்பு முகாம்: வாக்காளர் பட்டியல் பார்வையாளர் விவேகானந்தன், கலெக்டர் இளம்பகவத் ஆய்வு..
தூத்துக்குடி பள்ளிகளில் நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை முகாம்களை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் விவேகானந்தன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்திய தேர்தல் ஆணையம் நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 ஆகிய 4 நாட்கள் புதிய வாக்காளர் சேர்க்கை, பெயர் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம்களை நடத்த உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளராக தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் கட்டமைப்பு மேலாண்மை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் தூத்துக்குடி புனித மரியன்னை பள்ளி, பி.எம்.சி. பள்ளி, விகாசா பள்ளி, டூவிபுரம் டிஎன்டிடிஏ நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை முகாகளை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் விவேகாந்தன், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான இளம்பகவத் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சிகளில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கோட்டாட்சியர் பிரபு, தேர்தல் தாசில்தார் தில்லைபாண்டியன், தூத்துக்குடி தாசில்தார் முரளிதரன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
No comments