ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமை எம்.சி.சண்முகையா எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார்..
புதுக்கோட்டையில் நடைபெற்ற புதிய வாக்காளர் சேர்க்கை முகாமை ஒட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையம் நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 ஆகிய 4 நாட்கள் புதிய வாக்காளர்கள் சேர்க்கை, பெயர் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம்களை நடத்த உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் தொடங்கியது. அதன்படி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குமாரகிரி பஞ்சாயத்து புதுக்கோட்டை மற்றும் தெற்கு சிலுக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமினை எம்.சி.சண்முகையா எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்£ர்.
அப்போது, தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்கொடி, ஒன்றிய அவைத்தலைவர் பாலசுந்தரம், ஒன்றிய வழக்கறிஞர் அணி மகேந்திரன், இளைஞரணி சண்முக நாராயணன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சைமன், தொழிலாளர் அணி மொபட்ராஜன், கிளை செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் விஜயலட்சுமி, கப்பிக்குளம் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments