புதுச்சேரியில் நகரின் மையப் பகுதியில் உள்ள சிக்னல் நடுவே சுற்றுலா பயணிகள் இருவர் சிகரெட் பிடிக்கும் வீடியோ..
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு நாள்தோறும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் ஒருசிலர் அளவுக்கு அதிகமான மது போதையில் பொது இடங்களில் அநாகரிகமான செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த இரண்டு இளைஞர்கள், எப்போதும் பரபரப்பாக காணப்படும் நேரு வீதி - காமராஜர் சிலை சந்திப்பில் உள்ள சிக்னலில், சாலையின் நடுவே ஒய்யாரமாக அமர்ந்துகொண்டு சிகரெட் பிடிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இத்தனைக்கும் அந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் எப்போதும் பணியில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
பொதுமக்கள் அதிகளவில் கூடும் இது போன்ற இடங்களில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களை தடுக்க வேண்டுமென சிலர் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
No comments