புதுச்சேரி உள்ளாட்சி துறை அரசு தினக்கூலி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கி அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு சமீபத்தில் வழங்கப்பட்டது. அதாவது 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து அரசு துறைகளில் பணி புரியும் முழு நேர தின கூலி ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்வு வழங்கப்பட்டது.இந்த நிலையில் உள்ளாட்சித் துறையில் பணிபுரியும் முழு நேர தின கூலி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பியூன், சுகாதார ஊழியர்கள், காவலாளி,கேங்க்மேன், டேங்க் ஆபரேட்டர், பல்நோக்கு உதவியாளர் ஆகியோருக்கான சம்பளம் ரூ.900 - லிருந்து ரூ.918 ஆக உயர்த்தப்படுகிறது.எழுத்தர்,பில் கலெக்டர் ஆகியோருக்கு ரூ.995- லிருந்து ரூ.1,015 ஆக உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெனோகிராபருக்கான சம்பளம் ரூ.1,275- லிருந்து ரூ.1,301 ஆகவும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களுக்கு ரூ.1,460-லிருந்து ரூ.1,489 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு ஜூலை 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இதற்கான செலவினத்தை உள்ளாட்சி அமைப்புகள் அதன் சொந்த நிதியிலிருந்து வழங்கவேண்டும்.இதற்கான உத்தரவினை உள்ளாட்சித்துறை சார்பு செயலாளர் ரத்னா வெளியிட்டுள்ளார்.
No comments