மணலூர்பேட்டையில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி, மணலூர்பேட்டை திமுக நிர்வாகிகள், பாக முகவர்கள் (BLA) ஆலோசனைக் கூட்டம் நேற்று காலை அக்கட்சியின் அவைத்தலைவர் மாணிக்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளரும், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான பெருநற்கிள்ளி ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பகுதி செயலாளர் திரு. ஜெய்கணேஷ் மற்றும் மணலூர்பேட்டை திமுக நிர்வாகிகள், பாக முகவர்கள், திமுக சார்பு அணி நிர்வாகிகள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
No comments