நீரிழிவு நோய்க்கான சிறப்பு சிகிச்சை மையம் நெல்லை அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையில் துவங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அருணா கார்டியாக் கேர் தலைவர் டாக்டர் E. அருணாசலம், நிர்வாக இயக்குனர் A ஸ்வர்ணலதா அருணாசலம் கலந்து கொண்டு ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச சத்திய ஞான தேசிய பிரம்மச்சாரி சுவாமிகளிடமிருந்து ஆசிகளையும், வாழ்த்துக்களையும் பெற்றார்கள்.
விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் அருணா கார்டியாக் தலைவர் டாக்டர் E.அருணாசலம் புதிதாக துவங்கப்பட்ட நீரழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் சிறப்புகளையும், அதிநவீன உபகரணங்களையும் அதனால் மக்கள் பெறவிற்கும் நன்மைகளையும் பற்றி விளக்கி கூறினார்கள்.
இந்த மையத்தின் முலம்
- நரம்பு மண்டலம்(neurostim)
- போடியா ஸ்கேன்(podia scan)
- பாத மருத்துவம்(podiatry)
- வைபுரோ பரிசோதனை(vibro test)
- வாஸ்குலர் திரையிடல் பரிசோதனை (vascular screening)
- நரம்பியல் பரிசோதனை(neuropathy screening)
- கால் வெப்பநிலை அளவீடு பரிசோதனை(IR foot temperature measurement)
ஆகிய சிறப்பு சிகிச்சைகளைப் பெற்று பயன் பெறலாம் என்று தெரிவித்தார்.
விழாவிற்கு அருணா கார்டியாக் கேர் மருத்துவர்கள் டாக்டர் மாதவன், டாக்டர் விஜய்ஸ் ஆனந்த், டாக்டர் கணபதி சக்திவேல், மற்றும் ஒருங்கிணைப்பாளர் ராமன்,பொது மேலாளர், மனோகர் ராம், A.R.லஷ்மணன் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள். விழாவிற்கு வந்திருந்த மருத்துவ குழுவினருக்கும், பொதுமக்களுக்கும் அருணா கார்டியாக் கேர் தலைவர் டாக்டர் E. அருணாசலம், நிர்வாக இயக்குனர் A. ஸ்வர்ணலதா அருணாசலம் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்கள்.
No comments