உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 144 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் தலைமை தாங்கி 144 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணை தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டேனியல் ராஜ், துணைத் தலைவர் பிரகாஷ், பொருளாளர் ரவி, நகர மன்ற உறுப்பினர் செல்வகுமாரி ரமேஷ்பாபு, நல்லாசிரியர் அருணா சூர்யகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் வரவேற்றார் மேலும் பள்ளியின் ஆசிரியர்கள், ஆசிரியைகள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
No comments