கடல் அரிப்பால் டேனிஷ் கோட்டை பிரதான மதில் சுவற்றிற்கு முன்பாக உள்ள பாதுகாப்பு முள்வேலி தடுப்பு சுவர் இடிந்துவிழும் நிலை..
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் கி.பி.1620 ஆம் ஆண்டு டென்மார்க் படைத்தளபதி ஓவ் கிட்டி என்பவரால் உலகப் புகழ்பெற்ற டேனிஷ் கோட்டை கட்டப்பட்டது. இந்த கோட்டை 1978ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வு துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. டேனிஷ் காலத்தில் கோட்டைக்குள் கடல் நீர் புகாத வண்ணம் செங்கல் சுண்ணாம்பால் தடுப்பு சுவர்களை எழுப்பி இருந்தனர். அந்த சுவர் கடல் அரிப்பால் அடித்து செல்லப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் டேனிஷ் கோட்டை தற்போது மூன்றாவது முறையாக பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில் வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக அலையின் வேகம் அதிகமாக உள்ளதால் கரைகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோட்டையின் பிரதான மதில்சுவருக்கு முன்னாள் உள்ள முல்வேலி தடுப்புசுவர் இடிந்துவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த நிவர் புயலின் போது இந்த முள்வேலி தடுப்புசுவர் கடல் அரிப்பால் இடிந்துவிழுந்த நிலையில் மீண்டும் முள்வேலி தடுப்புசுவர் அமைக்கப்பட்டது. கல்தடுப்பு சுவர் கோட்டையை பாதிக்காதவாறு முழுமையாக அமைக்கப்படாததால் மீண்டும் முள்வேலி தடுப்புசுவர் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா தலத்தின் அடையாளமாக விளங்கும் டேனிஷ் கோட்டைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு எஞ்சிய பகுதியில் கல்தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
No comments