Breaking News

உளுந்தூர்பேட்டையில் தமிழக முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமகவினரை போலீசார் கைது செய்தனர்.

 


அதானி விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸின் அறிக்கை குறித்து கேள்விக்கு அவருக்கு வேறு வேலை இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த வந்திருந்தனர் அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை எனக் கூறியபோது தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பாமக வினரை கைது செய்தனர்.


இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

No comments

Copying is disabled on this page!