தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான சிட்டிங் வாலிபால் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து..
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தூத்துக்குடியில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிட்டிங் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் 16 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 200 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற சிட்டிங் வாலிபால் போட்டி தூத்துக்குடி கேம்ஸ் வில்லேவில் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சியல், மாவட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் துரைப்பாண்டியன், கேம்ஸ் வில்லே உரிமையாளர் ரைபின், ரோட்டரி சங்கத்தை சேர்ந்த இப்ராஹிம், விக்னேஷ் மற்றும் மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், போல்பேட்டை பகுதிச் செயலாளர் ஜெயக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments