மாவீரர்கள் ஆறுமுகம், வரதராஜன் வீரவணக்க நாள்..
தேனி தெற்கு மாவட்டம் இந்துமுன்னணி பேரியிக்கத்தின் சார்பாக வருகின்ற நவம்பர் 30 ம் தேதி சின்னமனூர் நகரில் காலையில்இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சார்பாக நடைபெறும்பெயர் பலகை திறப்பு விழாவிற்கும், மாலையில் உத்தமபாளையம் நகரில் மாவீரர்கள் ஆறுமுகம், வரதராஜன் வீரவணக்க நாள் நிகழ்ச்சிக்கும் வருகைதரும் மாநில தலைவர் காடேஸ்வரா. சி.சுப்பிரமணியம் வருகை, வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனுமதியும்,பாதுகாப்பும் வழங்க கோரி மதுரை கோட்ட செயலாளர் கோம்பை. கணேசன் தலைமையில் பொறுப்பாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (SP) மனு அளிக்கப்பட்டது.மாவட்ட தலைவர் V.சுந்தர், மாவட்ட பொதுச்செயலாளர் R.பாலமுருகன், ஆட்டோ முன்னணி மாநில துணைத்தலைவர் ஆச்சி.கார்த்திக்,மாநில பேச்சாளர் R.S.ராமகிருஷ்ணன், HYF மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்.செல்வா மற்றும் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
No comments