உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் மறுசீரமைப்புக்காக விண்ணப்ப படிவம் மாநில நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.
தமிழக முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகத்தை மறு சீரமைப்பு செய்யும் வேலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஈடுபட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றத் தொகுதி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு அதற்கான மாவட்ட மறுசீரமைப்பு சிறப்பு செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கவிஞர் இளமாறன் புதுவை மாநில பொருளாளர் தமிழ்மாறன் மற்றும் சக்திகிரி ஆகியோர் கலந்து கொண்டு உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி மாவட்டத்திற்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளை மாநில மாவட்ட ஒன்றிய நகர பொறுப்புக்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டனர் இதில் 500க்கும் மேற்பட்டோர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு விண்ணப்பங்களை வழங்கினார்கள்.
No comments