10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள மின்துறை 500 கோடி ரூபாய்க்கு தனியாருக்கு தாரை வார்க்க வேண்டிய அவசியம் என்ன..?
1010 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள மின்துறை 500 கோடி ரூபாய்க்கு தனியாருக்கு தாரை வார்க்க வேண்டிய அவசியம் என்ன ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள மின்துறை 500 கோடி ரூபாய்க்கு தனியாருக்கு தாரை வார்க்க வேண்டிய அவசியம் என்ன என்று புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன்...
மக்கள் விரோதத் திட்டத்தை செயல்படுத்தும் ஒரு அடிமைத்தனமான பிஜேபி-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு புதுச்சேரியில் உள்ளது. லாபத்துடன் இயங்கும் மின் துறையை தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்க இந்த அரசு சதி செயலுடன் திட்டமிட்டு முடிவு செய்துள்ளது என்றார்.
மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது ஆனால் இந்த வழக்கில் 21 முறை புதுச்சேரி அரசு வாய்தா வாங்கி டெண்டர் விடும் காலத்தை நீட்டித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
ஆனால் மின் துறையை தனியார் மயமாக்குவதற்காக மின் கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் உள்ள 465 கோடி ரூபாய் பணத்தை உடனடியாக வசூல் செய்ய வேண்டும் என்று தலைமை செயலர் உத்தரவிடுகிறார் ஆனால் மின் துறை அமைச்சர் மின்துறை நஷ்டத்தில் இயங்குவதாகவும் அதனால் தான் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும் தெரிவிப்பது ஏற்புடையதல்ல.
கடந்தாண்டு 25 கோடி ரூபாய் லாபம் என்று கூறிய அமைச்சர் இந்த ஆண்டு 300 கோடி ரூபாய் நஷ்டம் என்று கூறும் அவர் அதற்கு விரிவான கணக்குகளை காட்ட முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரி அரசாங்கத்தில் வெளிப்படையான தன்மையில்லை மின்துறையை தனியார் மயமாக்க போகிறோமா இல்லையா என்பதனை தெளிவுபடுத்த வேண்டும் இதில் பொதுமக்களை இந்த அரசு ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டிய அன்பழகன் பாஜகவின் தவறான மக்கள் விரோத செயலுக்கு முதலமைச்சர் ஏன் துணை போகிறார் என்று கேள்வி எழுப்பினார்.
10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள மின்துறை 500 கோடி ரூபாய்க்கு தனியாருக்கு தாரை வார்க்க வேண்டிய அவசியம் என்ன என்றும் அனைத்து துறைகளிலும் ஊழல் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது லஞ்சம் என்பது புதுச்சேரி மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது என்றார்.
No comments