ராஜா நகர் அய்யனார் கோயில் வீதியில் ஆதிதிராவிட நலத்துறை நிதி உதவியுடன் புதிய சிமெண்ட் சாலை..
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் வார்டு பகுதியான ராஜா நகர் அய்யனார் கோயில் வீதியில் ஆதிதிராவிட நலத்துறை நிதி உதவியுடன் புதிய சிமெண்ட் சாலை மற்றும் இருபுற கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது... மேலும் புதிய சாலை அமைப்பதற்கு முன்பே புதிய புதைவிட மின் கேபிள்கள், பாதாள கழிவுநீர் தொட்டிகள் மூலம் இணைப்புகள் வழங்குதல், புதிய குடிநீர் குழாய்கள் அமைத்தல் போன்ற பணிகள் குறித்து உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான G.நேரு(எ) குப்புசாமி அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மேற்கண்ட பணிகள் முழுமை பெற்றவுடன் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி மற்றும் இருபுற காங்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறும் பணிகளை விரைந்து முடிக்குமாறும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது புதுச்சேரி நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், பொதுப்பணித்துறை பொது சுகாதார கழிவு நீர் உட்பட்ட பிரிவு உதவி பொறியாளர் வைத்தியநாதன், நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம்,பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் பாலாஜி, வெங்கடேசன் மின்துறை இளநிலை பொறியாளர் கார்த்திகேயன், செல்வராஜ் மற்றும் அதிகாரிகளும் ஊழியர்களும் அப்பகுதியை சேர்ந்த மனித நேய மக்கள் சேவை இயக்கப் பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்.
No comments