Breaking News

புற்றுநோய் மருத்துவ சேவையில் சிறப்பாக செயல்படுகிறது நாமக்கல் தங்கம் மருத்துவமனை.

நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள தங்கம் மருத்துவமனையில்புற்று நோய்க்கான சிகிச்சை பெறும் ஏழை எளியவர்களுக்கு உதவிடும் தன்னார்வலர்களுக்கு பெருமைப்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் உள்ள அரங்கில் நடைபெற்றது. தங்கம் மருத்துவமனையில் நிர்வாக இயக்குனரும் மருத்துவர் விமான இரா.குழந்தைவேல் தலைமை தாங்கினார். மருத்துவர் மல்லிகா குழந்தைவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா, கரூர் வைசியா வங்கியின் சி ஆர் எஸ் தலைமை அதிகாரி வைத்தீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 


இந்நிகழ்ச்சியிāல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா பேசும்போது, நன்றி மறப்பது நன்றல்ல என்ற முதுமொழிக்கேற்ப பயனாளிகளுக்கும், நோயாளிகளுக்கும் நல்ல தரமான மருத்துவம் கிடைக்க நன்கொடை அளித்த அனைவரையும் பாராட்டுவதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கரூர் வைசியா வங்கியின் சி எஸ் ஆர் , கரூர் வைசியா வங்கியின் மேலாளர், தங்க மருத்துவமனையின் தலைவர் மருத்துவர். குழந்தைவேல், மருத்துவர். மல்லிகா மற்றும் மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாராளுமன்ற தேர்தலின் போது தேர்தல் பணிக்காக வந்த அலுவலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவருக்கான மருத்துவ சிகிச்சையை தங்கம் மருத்துவமனையில் சிறப்பாக வழங்கினர். 

வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியருக்கு புற்றுநோய் மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவமனை தங்கம் மருத்துவமனை. இப்படி நாடு முழுவதிலும் இருந்து பலராலும் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படும் சிறந்த மருத்துவமனை நாமக்கல் தங்கம் மருத்துவமனை. நோயாளிகளை google போன்றவற்றில் தேடி மருத்துவத்தை பற்றிய விவரங்களை கேட்கும் காலம் இது. மருத்துவமனையின் தலைமை மற்றும் சரியாக இருந்தால் போதாது.  சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் மருத்துவமனையை சுத்தமாக வைத்திருக்கும் மருத்துவ பணியாளர்களும் அதற்கு உறுதுணையாக இருக்கும் அத்தனை பேரும் முக்கியம். அந்த வகையில் இந்த தங்கம் மருத்துவமனை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 


மருத்துவமனையின் பணியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என் நாமக்கல் மாவட்டத்தில் வாழும் மக்கள் அனைவரும் என்னுடைய மக்கள். அவர்களுக்கு தேவையான திட்டங்கள் எளிய முறையில் சென்று சேர வேண்டும். எனக்கு ஒரு குறுஞ்செய்தியோ அல்லது வாட்ஸ் அப்பில் செய்தியோ அனுப்பினால் போதும். எனக்கு துணையாக உள்ள 7 பேர் குழு உடனடியாக அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.


இந்த மாவட்டத்தில் இருக்கும் அலுவலர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் அனைவரும் கடின உழைப்பாளிகள். மிகவும் சிக்கனமாக செலவு செய்பவர்கள். எந்த தொழில் செய்பவர்களாக இருந்தாலும் எந்த நிறுவனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்த வேலை செய்யும் பணியாளர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக ஒன்றிணைந்து உழைக்கின்றனர். நாமக்கல் போன்ற நடுத்தர மாவட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையை நிறுவி அதை மிகச் சிறந்த சிகிச்சை அளித்து வெளிநாட்டில் இருந்து கூட நோயாளிகள் வந்து சிகிச்சை பெறும் வகையில் மருத்துவர் குழந்தைவேல் மிகச் சிறப்பான முறையில் அதை நடத்தி வருகிறார்.


என்னுடைய சொந்த மாவட்டம்  தூத்துக்குடியில் இவ்வளவு தன்னம்பிக்கையான ஆட்களோ வழி நடத்துபவர்களோ இல்லை என்பதில் எனக்கு கொஞ்சம் வருத்தம். எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு இந்த மாவட்டத்து மக்கள் பள்ளிகளுக்கு கழிவறை கட்டித் தருதல் மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் தருதல்  போன்றவற்றைச் செய்யும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் .என் மாவட்டத்து அரசியல்வாதிகளும் கட்சி பேதமின்றி நன்கொடை அளிக்கும் நல்லுள்ளம் கொண்டவர்கள் .மக்களின் மருத்துவ தேவைகளை கருத்தில் கொண்டு 2008 ஆம் ஆண்டு கலைஞர் காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டது. அரசின் நோக்கமே மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்பதுதான்.


பொதுமக்களுக்கு தங்களது உடல் நிலையை குறித்த விழிப்புணர்வு அவசியம்.வருடம் ஒருமுறை முழு மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 18 வயதுக்கு மேல் வரும் அனைவருக்கும் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளதா என பரிசோதனை செய்யும் வசதி உள்ளது.ஆனால் எல்லோரும் இந்த பரிசோதனையை செய்துதான் ஆக வேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்த முடியாது. எனவே அதற்காக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அதை முன்னெடுத்து இருக்கும் தங்கம் மருத்துவமனைக்கு வாழ்த்துக்கள் என பெருமைப்படுத்தினார். 

No comments

Copying is disabled on this page!