திருப்பத்தூர் மாவட்ட திமுக மாணவரணி சார்பில் துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாள் விழா.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய சின்னவரிக்கம் நடுநிலை பள்ளியில் இன்று தமிழ் நாடு துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒன்றிய பொருப்பாளார் எம்.டி. சீனிவாசன் தலைமையில் சின்னவரிக்கம் ஆர்.எஸ். நவீன்குமார் மாவட்ட துணை அமைப்பாளர் முன்னிலையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன் மற்றும் மாதனூர் ஒன்றிய குழு துணை தலைவர் சாந்தி சீனிவாசன் கலந்து கொண்டு கேக் வெட்டியும், மாணவர்களுக்கு நலதிட்ட உதவிகள் மற்றும் இனிப்பு வழங்கி சிறப்பித்தனர். உடன் ஒன்றிய அவைத்தலைவர் சிவகுமார் துணைச் செயலாளர் சேகர் மாவட்டப் பிரதிநிதி பொன்ராஜன் பாபு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் குணசேகரன் சின்னவரிக்கம் முன்னாள் செயலாளர் அமர்நாத் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கார்த்திக் ஆப்ரின்தாஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
No comments