தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளருடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆலோசனை..!
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற உள்ள பணிகள் குறித்து பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் தலைமைப் பொறியாளர் தீனதயாளன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா கலந்து கொண்டார்.
அப்போது, வில்லியனூர் கஸ்தூரிபாய் காந்தி திருமண மண்டபம் புதிதாக கட்டுதல், சுல்தான்பேட்டை குளம் புதிதாக சீரமைப்பு, மூர்த்தி நகர், பாண்டியன் நகர் சாலை மற்றும் வாய்க்கால்கள் ஏஎப்டி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் உத்திரவாகினிபேட், பெரிய பேட், அம்பேத்கர் நகர், எஸ் எஸ் நகர், கரையான்பேட் பகுதிகளில் பணிகளுக்கான டெண்டரை விரைவாக செயல்படுத்துவது மற்றும் ஜி. என். பாளையம், ஆத்தூவாய்கால் பேட், பாலாஜி நகர், சிவகிரி நகர், செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் சிறு பாலங்கள் அமைப்பது சம்பந்தமாக பல முக்கிய பணிகள் விரைவாக செய்வது குறித்து பேசி முடிவெடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், உமாபதி, சுந்தரமூர்த்தி, மல்லிகா மற்றும் திமுக நிர்வாகிகள் சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், இலக்கிய அணி துணை அமைப்பாளர் கலிமுல்லா, பொருளாளர் கந்தசாமி, ஜனா ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments