புதுச்சேரி கனகன் ஏரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது..
புதுச்சேரி கோரிமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கனகன் ஏரி சாலை அருகே இளைஞர்கள் சிலர். அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்றனர்.அவர்களை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 135 கிராம் கஞ்சா வைத்திருந்து தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சாரம் பகுதியை சேர்ந்த நவீன் (எ) துப்பாக்கி (22) மற்றும் பூமியான்பேட் பகுதியை சேர்ந்த ரேவந்த் குமார் (21) என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
No comments