மக்கள் வேண்டுகோளை ஏற்று சமூக சேவகரும் வழக்கறிஞருமான சசிபாலன் தன் சொந்த செலவில் சிசிடிவி கேமரா பொருத்தி திறந்து வைத்தார்.
உழவர்கரை தொகுதி முழுவதும் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த சேவையை சமூக சேவகரும் வழக்கறிஞருமான சசிபாலன் செய்து வருகிறார். அந்த வகையில் உழவர்கரை பகுதியில் பல்வேறு குற்ற சம்பவங்கள் தடுக்கும் வகையில் மேரி உழவர்கரை பகுதி மக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மக்கள் நலன் கருதி தன் சொந்த செலவில் இன்று சிசிடிவி கேமரா பொருத்தி அதனை திறந்து வைத்தார்.
மேலும் அப்பகுதி மக்களிடையே குற்றங்களை எந்தெந்த வகையில் தடுக்க வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வையும் சசிபாலன் அப்பகுதி மக்களுக்கு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் மேரி உழவர்கரை தொகுதி பொதுமக்கள் மற்றும் சசிபாலன் பாசறை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments