Breaking News

அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரசுராமனின் 3-ஆம் ஆண்டு நினைவு தின நலத்திட்ட உதவிகள்.!!

 


புதுச்சேரி மாநில அதிமுக முன்னாள் மாநில அவைத்தலைவரும்,உருளையன்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பரசுராமனின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.பரசுராமன் அறக்கட்டளைகள் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பிருந்தாவனம் பகுதியில் நடைபெற்றது.


பரசுராமன் அறக்கட்டளைகள் நிறுவனர்கள் வானூர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் காந்திமதி,சென்னை விமான நிலையத்தின் உதவி பொது மேலாளர் பரணிதரன் ஆகியோர் கலந்து கொண்டு,100கும் மேற்பட்ட துப்பரவு பணியாளர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். முன்னதாக உயிர்த்துளி நிறுவனம் மூலம் ஜிப்மர் மருத்துவமனை அருகே 1500கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் அதிமுக காமராஜர் நகர் தொகுதி செயலாளர் ஆறுமுகம், முன்னாள் உருளையன்பேட்டை தொகுதி செயலாளர் மோட்சநாதன், வழக்கறிஞர்கள் சரவணன், இளையராஜா,சக்திவேல்,மருகையன்,ராஜா(எ) செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!