வேலூர் மாவட்டம் கல்வி கடன் வழங்குவதில் சுணக்கம் கூடாது - வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுரை.
வேலூர் மாவட்டம் கல்விக் கடன் வழங்குவதில் சுணக்கம் கூடாது வங்கிகளுக்கு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி அறிவுரை.
வேலூரில் வங்கியாளர்கள் கூட்டம் கல்விக் கடன் வேளாண் கடன் ஆகியவைகளை வழங்கிட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிரப்பித்தார் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் வே. இரா. சுப்புலெட்சுமி தலைமையில் வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னோடி வங்கி மேலாளர் ஜமால் மொய்தீன் திட்ட இயக்குனர் நாகராஜன் உள்ளிட்ட திரளான வங்கி மேலாளர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் மாணவர்களுக்கான கல்விக்கடன் விவசாய கடன் இளைஞர்கள் சுயதொழில் துவங்க கடன் வழங்க வேண்டும் அதில் சுணக்கம் காட்டக்கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார் மேலும் எவ்வளவு கடன் வழங்க திட்டமிட்டுள்ளது என்று குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments