வானூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பெரம்பை ஊராட்சி மன்றத்தில் உள்ளாட்சிகள் தினவிழா கிராம சபை கூட்டம்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை ஊராட்சி மன்றத்தில் உள்ளாட்சிகள் தினவிழா சிறப்பு கிராம சபை கூட்டம் நடுப்பாளையம் அரசு நடுநிலைபள்ளி வளாகம் அருகே நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவா் இந்திரா சக்திவேல் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் கல்பனா பொன்னிவளவன் முன்னிலை வகித்தாா்.இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக துணை வட்டார வளா்ச்சி அலுவலரும் பெரம்பை அலுவலக பட்டாளருமான முருகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுய உதவி குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை, ஜல்ஜீவன் இயக்கம் , கூட்டாண்மை வாழ்வாதாரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments