மதவாத கட்சியான பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை..
புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன்,
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அறிவித்தபடி, மதவாத கட்சியான பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை என்ற அவர், தமிழக திமுக அரசின் செயல்படாத தன்மைகளை மறைக்க சில விஷமிகள் திட்டமிட்டு வதந்தி பரப்புவதாக குற்றம் சாட்டினார்.
புதுச்சேரியில் எந்த திட்டத்தை தொடங்கினாலும், ஆட்சியாளர்கள் நிதி ஆதாயம் தேடுவதிலேயே குறியாக உள்ளனர் என்றும், அனைத்து துறைகளிலும் ஊழல் புரையோடி உள்ளதால் நிர்வாக திரணற்ற அரசாக உள்ளது என கூறினார்.
புதுச்சேரியில் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் கடந்த 2017ஆம் சுமார் ரூ.1800 கோடி அளவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல திட்டங்கள் செயல்படுத்த முடிவு செய்த நிலையில், இதுவரை சுமார் ரூ. 700 கோடிக்கு மட்டுமே பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக,ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட வாழைக்குளத்தில் 220 பயனாளிகளுக்கு 20 கோடி செலவிலும், குமரகுரு பள்ளத்தில் 216 பயனாளிகளுக்கு ரூ.45.50 கோடி செலவில் அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதில் மெகா ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டிய அன்பழகன்,ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த விஞ்ஞான ஊழல் குறித்து கவர்னர் கைலாஷ் நாதன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
No comments