Breaking News

வில்லியனூர் வி.மணவெளி பாலாஜி நகரில் ரூ. 32 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை எதிர்க்கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார்.

 


வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி, வி.மணவெளி, பாலாஜி நகரில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் ரூபாய். 32 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பீட்டில் தார்ச் சாலையுடன் கூடிய பக்கவாட்டு கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இதில், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியாளர் சத்தியநாராயணா மற்றும் தொகுதி திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!