Breaking News

உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவர் பூர்விக இடத்தை மகன்களுக்கு தெரியாமல் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு போக்கியம் செய்துள்ளார்.

 இந்த நிலையில் இதனை அறிந்த இவரின் மருமகள்கள் தனது கணவருக்கு தெரியாமல் போக்கிய போட்டுள்ளதாகவும் பின் காலத்தில் இந்த கடனை யார் அடைப்பது எனக் கூறி உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் மாமனார் மீது மருமகள்கள் புகார் அளித்தனர்.  20 நாட்கள் ஆகியும் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்தவர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே நகர் கிராமத்தில் இன்று சென்னை செல்லும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் சாலை மறியலை போராட்டத்தை கைவிட்டனர்.

மாமனார் மீது கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் மருமகள்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments

Copying is disabled on this page!