மணலூர்பேட்டையில் அரிமா சங்கம் சார்பில் மாபெரும் அன்னதானம்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் உள்ள அரிமா சங்கம் சார்பில் இச்சங்கத்தில் நிர்வாகியாக உள்ள சிவப்பிரகாசம் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீமிளகு விநாயகர் ஆலயம் முன்பாக இச்சங்கத்தின் செயலாளர் திருமால், பொருளாளர் முனியன், ஒருங்கிணைப்பாளர் முருகன் முன்னிலையில் சங்கத் தலைவர் சரவணன் தலைமையில் மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட அரிமா சங்கத் தலைவர் அம்மு ரவிச்சந்திரன் அன்னதானம் வழங்கிய துவக்கி வைத்தார். முன்னாள் தலைவர் செந்தில்குமார், திருவரங்கம் ரவிச்சந்திரன், ஆதி மூலம் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.
No comments