தந்தை அண்ணன் தம்பி தாய் என அடுத்தடுத்து உயிரிழந்த சோகத்தில் இருந்த வாலிபர் மூன்று மாதமாக மனநிலை பாதிக்கப்பட்டு தூக்கிட்டு தற்கொலை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திருவெண்ணைநல்லூர் சாலையில் வசித்து வந்தவர் முத்துவேல் (35) இவர் குடும்பத்தில் தாய் தந்தை அண்ணன் தம்பிகள் என சந்தோஷமாக இருந்த குடும்பத்தில் தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் தொடர்ந்து அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் தம்பி ஓடும் ரயிலில் குறுக்கே பாய்ந்து உயிர் இறந்துள்ளார். இதனால் விரத்தியில் இருந்த தாய் மற்றும் மகன், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார். இதனால் யாரும் இல்லாத அனாதை போல் மனநிலை பாதிக்கப்பட்டு வாழ்ந்து வந்த முத்துவேல் திருச்சி சாலையில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் முத்துவேல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேட்ட உறவினர்கள் யார் விட்ட சாபமோ ஒவ்வொருவராக இல்லாம போயிடுச்சு என உறவினர்கள் சோகம்.
No comments