ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம்: இளவேலங்காலில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி அருகே ஒட்டப்பிடாரம், இளவேலங்காலில் டெங்கு சிறப்பு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் எல்.ரமேஷ் பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து எடுத்துக்கூறினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தின் மூலம் சிறப்பு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இளவேலங்காலில் நடைபெற்றது. முகாமில் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எல்.ரமேஷ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் பரிசோதனை முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துக்கூறினார்.
இந்நிகழ்ச்சியில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் காளிமுத்து, செவிலியர்கள் செல்வி, ராஜேஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் பாலாஜி, பாபு, பாஸ்கர், கொடியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார், ஒன்றிய திமுக பொறியாளர் அணி மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments